5 - ந்தேதி வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் - சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 12:02 AM
ஐந்தாம் தேதி வரை ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவல் தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், சிபிஐ காவல், கைதுக்கு எதிராக ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு அழுத்தம் தரப்பட்டதாக கூறினார். மேலும்,  14 நாள்கள் கழித்து ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ப.சிதம்பரத்தின் மனு செப்.5 ஆம் தேதி விசாரிக்கப்பட்டால் பலனற்றதாகிவிடும் என்றும் தெரிவித்தார். அப்போது, சிபிஐ நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றால், ஜாமின் கோர மாட்டோம் என, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தனர். விசாரணையின் முடிவில், ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவல் தொடரும் என்றும் வருகிற 5-ம்  தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிற செய்திகள்

காஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

24 views

புதுச்சேரி : முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

16 views

தெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று

நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று .

27 views

பிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு

டெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.

28 views

கே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்

பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

83 views

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.