அதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு
பதிவு : செப்டம்பர் 03, 2019, 11:58 PM
அமெரிக்காவில் வாங்கப்பட்ட அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன அப்பாச்சி  போர் ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. அங்கு வடிவமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 200 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் உலகின் பல நாடுகளுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தியாவும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. அவை இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை  தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு கொண்டுவரப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு 
தண்ணீரை பீய்ச்சியடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில்,  அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு பொட்டுவைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வெடி பொருட்களை கொண்டு அப்பாச்சி ஹெலிகாப்டரின் மாடல் AH-64E  என்று காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை பெற்றுள்ள உலகின் 16-வது நாடு இந்தியாவாகும். வானில் பறந்து குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், இந்தியாவுக்கு வர வேண்டிய எஞ்சிய 14 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வந்து விடும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.  எத்தகைய பருவகால நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இணைப்பு மூலம் இந்திய விமானப்படை மேலும் பலம் பெற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

10 views

மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக மதுபாட்டில்களின் புகைப்படம் - மத்திய உள்துறை அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு..

கொல்கத்தாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறி மதுபாட்டில்களின் புகைப்படம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 views

பாஜக முக்கிய பிரமுகர் சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி தென்பட்டதால் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 views

மீண்டு எழுந்தது டிக் டாக் செயலி..!!

சர்ச்சையில் சிக்கிய டிக் டாக் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தர மதிப்பீட்டில் 4 ஸ்டார்களை மீண்டும் பெற்றுள்ளது.

10 views

ஆந்திரா வந்தது வெட்டுக்கிளி படை - விவசாயிகள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் ஆனந்தனபூர் பகுதியில் வெட்டுக்கிளி படை வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

13 views

புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி...

புதுச்சேரியில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உயர்த்தப்பட்டது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.