பொன்னேரி அருகே முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில் விவசாயி படுகாயம்
பதிவு : செப்டம்பர் 03, 2019, 04:48 AM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில், விவசாயி படுகாயம் அடைந்தார். காட்டூரை சேர்ந்த விவசாயி அருளானந்தம், தனது இருசக்கர வாகனத்தில் பொன்னேரிக்கு சென்றுள்ளார்.சின்னமனோபுரம் பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த, முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். அருளானந்தம் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றபோது, அவரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு, கொள்ளையர்கள் தப்பியோடினர். படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை, குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது

136 views

பிற செய்திகள்

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

9 views

ஜெயலலிதாவின் நினைவிடம் 27-ம் தேதி திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்

26 views

ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

128 views

மருத்துவர் சாந்தா காலமானார்

புற்றுநோய் மருத்துவ நிபுணரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

84 views

"அனுமதி இல்லா சிலைகளை அகற்ற உத்தரவு" - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

34 views

ஜோதிடத்தை நம்பி வீட்டை மாற்றிய தம்பதி - கழிவறை இல்லாத வீட்டுக்கு சென்றதால் விபரீதம்

ஜோதிடத்தை நம்பி வேறு வீட்டுக்கு சென்றதால், 5 வயது மகளை அஸ்திவார குழியில் தேங்கியிருந்த தண்ணீருக்கு பலி கொடுத்திருப்பது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

1335 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.