மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - 2-வது டெஸ்ட்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
பதிவு : செப்டம்பர் 03, 2019, 02:58 AM
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.
கிங்ஸ்டனில் நடைபெற்ற  போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது, இந்திய அணி. 

இமாலய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய 4-ஆம் நாள் ஆட்டத்தின்போது, தனது 2-வது இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 257 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-க்கு, பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.  இந்திய வீரர் ஹனுமா விகாரி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே  நடந்த டி 20, ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி :
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். கோலி கேப்டனாக பொறுப்பேற்று, 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 28 வெற்றிகளை தேடி தந்துள்ளார். தோனி கேப்டனாக 27 வெற்றிகளை பதிவு செய்திருந்ததே, இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதனை கோலி முறியடித்துள்ளார்.

பிற செய்திகள்

"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தோனி விளையாடவில்லை" - இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனி விளையாடவில்லை என இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

781 views

60 குழந்தைகள் டென்னிஸ் கற்கும் செலவை ஏற்கும் போபண்ணா..

இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 60 குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாடுவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

14 views

"ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்" - டிராவிட் கருத்து

ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

29 views

"மின்னலே" பட வசனத்தை பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்" - நடிகர் மாதவன் பாராட்டு

மின்னலே படத்தின் வசனங்களை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

155 views

பயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

9 views

பண்டஸ்லீகா கால்பந்து தொடர் - ஆக்ஸ்பர்க் அணி அபார வெற்றி

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் , AUGSBURG அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் FC SCHALKE அணியை வீழ்த்தியது,.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.