1664 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன செல்போன்கள் - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 06:06 PM
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆன்ட்ராய்ட் செல்போன்களை வழங்கினார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆன்ட்ராய்ட் செல்போன்களை, வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முதல்கட்டமாக ஆயிரத்து 664 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திட்டங்களை முனைப்பாக மக்களிடத்தில் கொண்டு செல்லக் கூடியவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் என பாராட்டு தெரிவித்தார்.

பிற செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

153 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

155 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

9 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.