சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 03:43 PM
சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த நடிகர் கவின் தாயார் உள்ளிட்ட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் நாயகமான தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார், கவின்

சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததால், நடிகர் கவினின் குடும்த்தினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்த அருணகிரி-தமயந்தி தம்பதியின் மகள் ராஜலட்சுமி, மகன் சொர்ணராஜன் மற்றும் மருமகள் ராணி ஆகியோர், சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர். 

இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்று தரக் கோரி கடந்த 2007ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இறுதிகட்ட விசாரணை முடிந்தநிலையில், இந்த வழக்கில், குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

குற்றம்சாட்டப்பட்ட அருணகிரி, அவரின் மகன் சொர்ணராஜன் இறந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தமயந்தி, ராஜலட்சுமி மற்றும் ராணி ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என 29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

பண மோசடி வழக்கில், சிறை தண்டனை பெற்ற ராஜலட்சுமி நடிகர் கவின் தாயார். தமயந்தி மற்றும் ராணி ஆகியோரும் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 


பிற செய்திகள்

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

1 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

5 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.