திமுக எம்.பிக்களுடன் ஸ்டாலின் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 03:31 PM
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,  பொருளாளர் துரைமுருகன் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதன்முறையாக எம்.பியாக தேர்வாகி உள்ள 13 பேரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  வருகிற செப்டம்பர் மாதத்தில் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தி முடிப்பது, மக்களை சந்தித்து குறைகள் அறியும் கூட்டத்தை நடத்துவது, நாடாளுமன்றத்தில் தொகுதி திட்டங்களுக்காக பேசியதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க, அனைத்து தொகுதிகளிலும் மக்கள் சார்ந்த திட்டங்களில் எம்பிக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொகுதியில் அலுவலகங்கள் திறந்து எம்.பிக்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், தலைவர் பொறுப்பை ஏற்று, நேற்றுடன் ஓராண்டை நிறைவு செய்த ஸ்டாலினுக்கு, திமுக எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

745 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

326 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

191 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

132 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

87 views

பிற செய்திகள்

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

32 views

பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

57 views

கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து

மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது.

18 views

மீண்டு எழுந்தது டிக் டாக் செயலி..!!

சர்ச்சையில் சிக்கிய டிக் டாக் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தர மதிப்பீட்டில் 4 ஸ்டார்களை மீண்டும் பெற்றுள்ளது.

10 views

திருச்செந்தூர்: சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்...

திருச்செந்தூர் நகரில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9 views

ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் - 6 கடைகளுக்கு சீல் - ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.