சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு : பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மீது புகார்
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 07:31 PM
சென்னை புழல் சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை கண்டித்து தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில் , பிலால் மாலிக் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்ற போது கைதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து  சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இருவரிடமும் விசாரித்துள்ளார். அப்போது இருவரும் சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவான வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை கண்டித்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரும் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புழல் சிறைக்குள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

1 views

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

1 views

"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

11 views

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

639 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.