ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீடிப்பு
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 06:17 PM
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை நீடிக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை  தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.சட்ட விரோத பண பரிவர்த்தனை  கிரிமினல் குற்றம் என்றும், சில ஆதாரங்கள் அடிப்படையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் தொடர்பு இருப்பதை அறிந்த பின்னரே அவரை கைது செய்யும் முடிவுக்கு அமலாக்கத்துறை வந்ததாக அவர் வாதிட்டார். 

அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்வதற்கான சட்டபூர்வமான உரிமையை உச்சநீதிமன்றம் மறுக்க முடியாது என்றும் , அவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறை இயக்குநருக்கு உள்ளதாகவும்  துஷார் மேத்தா தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகவும் , இது தொடர்பான ஆவணங்களை திரட்டி, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதாகவும்  அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

ப. சிதம்பரத்தை கைது செய்தது இழிவுபடுத்தவே என்று அவரது தரப்பு வழக்கறிஞர்  அபிஷேக் மனு சிங்வி கூறியதை மறுத்த துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.

விசாரணையின் போது உரிய ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவரிடம் காட்டப்படும் என்று கூறிய துஷார் மேத்தா, போலி நிறுவனங்களை உருவாக்கியவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருடன்  தொடர்பில் உள்ளதாகவும் கூறினார். 

அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் தொடர்ந்ததால் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை ப.சிதம்பரத்தை  அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீடிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

ப. சிதம்பரம் - அரசியல் பயணம்

தமிழ்நாட்டில் இருந்து சென்று டெல்லியின் அதிகார மையத்தில் அதிகபட்ச உயரத்தை அடைந்தவர் ப.சிதம்பரம்.

80 views

அன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்

இன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.

52 views

பிற செய்திகள்

"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

1 views

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

73 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

22 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

346 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.