ஹெல்மெட் வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை - உயர் நீதிமன்றம்
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 06:05 PM
ஹெல்மெட் வழக்கில் நீதிமன்றம் கேட்கும் விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்த போது , கட்டாய ஹெல்மெட் சட்டம்  தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த 2007 ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்த போதும், அதை அமல்படுத்த 12 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டிய நீதிபதிகள்,

ஹெல்மெட் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை ஏன் அமல்படுத்தவில்லை என்பது குறித்து உள்துறை செயலாளரும், ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் குறித்த மருத்துவ அறிக்கையை  தாக்கல் செய்யாதது ஏன்  என சுகாதார துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மாவட்ட வாரியாக, ஹெல்மெட் அணியாதவர்கள்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், பலியானவர்களின் விவரங்களையும் சமர்ப்பிக்க தமிழக  டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஹெல்மெட் வழக்கு தொடர்பான இந்த விவரங்களை வழங்காவிட்டால்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள்,  விசாரணையை செப்டம்பர் 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.தொடர்புடைய செய்திகள்

ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

49 views

கேமரா பதிவை வைத்து ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை - அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - வைகோ விளக்கம்

தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

42 views

தேர்வு கட்டண உயர்வு : அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுட்டனர்.

23 views

இன்று தி.மு.க. உதயமான நாள் - "இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க."- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்

இன்று தி.மு.க. உதயமான நாள் - "இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க."- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்

20 views

பெரியார் பிறந்த நாள் - பினரயி விஜயன் தமிழில் பதிவு

பெரியார் பிறந்த நாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

45 views

காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்- விழாவில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்பு

காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்- விழாவில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்பு

60 views

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவு

உலக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அகடோபர்-11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகை தர உள்ளனர்.

1755 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.