சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு : நாளை ஒத்திவைப்பு
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 07:07 PM
சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையும், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு மற்றும் சிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட எழுத்துப்படிகளை பாதுகாக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்காமல் ஆவணங்களை வழக்கு குறிப்பேட்டில் சேர்த்ததை ஏற்க முடியாது என்றும் கபில் சிபில் வாதங்களை முன்வைத்தார். ஐஎன்எக்ஸ் வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2009 ஆண்டுக்கு பிறகு குற்றமாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால், இந்த வழக்கில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் 2007-2008 ஆண்டு காலக்கட்டத்தில்  நடைபெற்றவை என்றும் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை முன்வைத்தார். சட்டத்தில் குற்றமென அறிவிக்கப்படாத செயல்களைக் காட்டி ஒரு நபரை குற்றவாளி என முத்திரை குத்த முயற்சி செய்யப்படுகிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து சிதம்பரம் தப்பித்து விடுவார் என்ற தவறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சிதம்பரத்திடம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் ஏற்கெனவே திரும்ப திரும்ப கேட்கப்பட்டது தான் என்றும் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். போலீஸ் காவல் என்பது இங்கு ஒருவரை தாழ்மையடைய செய்வதாக உள்ளது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மற்றும் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் நாளை ஒத்திவைக்கப்பட்டது.அதுவரை அமலாக்கத்துறை வழக்கில் நாளை வரை சிதம்பரத்தை கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிற செய்திகள்

வருமான வரி வரம்பில் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 - நேரடி பணபரிமாற்றம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28 ஆம் தேதி இணையதள பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

32 views

"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

53 views

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

39 views

புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

9 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

19 views

"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.