நீட்,நெக்ஸ்ட் தேர்வு ரத்து உள்பட 25 தீர்மானங்கள் : திராவிடர் கழகம் பவள விழா மாநாட்டில் தீர்மானம்
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 04:18 PM
தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என திராவிடர் கழகம் பவளவிழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள மணியம்மையார் நினைவரங்கில், இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.  தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த பவள விழா மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கை வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும், பெண்களுக்கான ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், இந்தி சமஸ்கிருத திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட 25 தீர்மானங்கள் திராவிடர் கழகம் பவள விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3535 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.