தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 04:04 PM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் நிலை குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, சிபிஐ க்கும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2018 ஆகஸ்ட் 14ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, துப்பாக்கி சூடு சம்பவம், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநில காவல்துறையிடம் இருந்து 207 வழக்குகள் சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை, அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள்பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிபிஐ, மதுரைக் கிளை உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 16ம் தேதி, விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

1 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

4 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.