தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான சம்பவம் - தனியார் வங்கி முதுநிலை மேலாளர் உள்பட 7 பேர் கைது
பதிவு : ஆகஸ்ட் 23, 2019, 07:30 AM
திருவண்ணாமலையில் இயங்கிவரும் பிரபல தனியார் வங்கியில் நகைகள் மாயமான விவகாரத்தில் வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கடந்த மே மாதம்  லாக்கரில் உள்ள அடமான நகைகளை சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது நகைகள் சரியாக இருந்த நிலையில், அடுத்த சில நாட்களில், லாக்கரில் இருந்த நகைகள் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. சோதனையிட்டதில் லாக்கரில் இருந்த 40 பேரின் 3710 கிராம் தங்க நகைள் மாயமானது தெரிவந்தது. இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாய் என தெரிகிறது. இந்த சம்பவத்தை விசாரித்த,  திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான குழு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த‌போது, அதில், கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பதிவான வீடியோக்களும் மாயமாகி இருப்பது தெரிய வந்த‌து.  இதையடுத்து போலீசாரின் சந்தேகம் வங்கி ஊழியர்களின் மீது திரும்பியது. கிளை மேலாளர் சுரேஷ் உள்பட வங்கி ஊழியர்கள்,7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிற செய்திகள்

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

33 views

பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

59 views

கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து

மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது.

20 views

மீண்டு எழுந்தது டிக் டாக் செயலி..!!

சர்ச்சையில் சிக்கிய டிக் டாக் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தர மதிப்பீட்டில் 4 ஸ்டார்களை மீண்டும் பெற்றுள்ளது.

10 views

திருச்செந்தூர்: சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்...

திருச்செந்தூர் நகரில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9 views

ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் - 6 கடைகளுக்கு சீல் - ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.