விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி
பதிவு : ஆகஸ்ட் 21, 2019, 11:15 PM
மாற்றம் : ஆகஸ்ட் 21, 2019, 11:23 PM
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை முடித்து கொண்டு, ப. சிதம்பரம், டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு காரில் சென்றார். சிதம்பரம்  அவரது வீட்டினுள் சென்றவுடன் காம்பௌண்ட் கதவுகள் மூடப்பட்டு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கபில்சிபல், அபிசேக் சிங்வி உள்ளிட்ட சில காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கார்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன. காம்பௌண்ட் கதவுகள் மூடப்பட்டதால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்,  சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றனர். 

 சிதம்பரம் வீடு முன் குவிந்த காங். தொண்டர்கள்

இதையடுத்து போலீசார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிதம்பரத்தை அழைத்து செல்ல சிபிஐ அதிகாரிகள் வரவழைத்த கார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் சிலர்,  சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பினர் . டெல்லி போலீசார், காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தினர்.

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரம்

நீண்ட நேர பரபரப்புக்கு பின், ப. சிதம்பரத்தை காரில் அழைத்துக்கொண்டு, சிபிஐ தலைமை அலுவலகத் திற்கு விரைந்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள், காரை வழி மறித்ததால், மீண்டும் பரபரப்பு நிலவியது. தற்போது சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரத்திடம் அதிகாரிகள், விசாரணையை துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3667 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

396 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

340 views

பிற செய்திகள்

உரிய விசா இன்றி மலேசியா சென்ற பாக்கியராஜ் கைது - இந்திய தூதரக உதவியுடன் விடுதலை

புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த பாக்கியராஜ் உரிய விசா இன்றி மலேசியா சென்றதால் அங்கு கைது செய்யப்பட்டார்.

3 views

5 பவுன் நகை மற்றும் செல்போனை தவற விட்ட பெண் - சிடிவி உதவியுடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்

புதுச்சேரி அருகே பெண் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

20 views

சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி

சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.

378 views

இந்தியாவை இந்தி ஒருங்கிணைக்காது - புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்

இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது ஆனால் பிஎஸ்என்எல் தான் ஒருங்கிணைக்கும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

10 views

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

6 views

பலகட்சி ஜனநாயக முறை தோல்வியா? என மக்களுக்கு சந்தேகம் - அமித்ஷா

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பலகட்சி ஜனநாயக முறையில் மக்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.