நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2
பதிவு : ஆகஸ்ட் 20, 2019, 04:53 PM
மாற்றம் : ஆகஸ்ட் 20, 2019, 05:25 PM
நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோவில் இருந்து விண்ணிற்கு புறப்பட்ட16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.நிலவை நோக்கிய தன் பயணத்தை தொடங்கிய சந்திரயான்-2  விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க  திட்டமிடப்பட்டது.அதன்படி புவிவட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது.30 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.நிலவின் வட்டப்பாதையில் செவ்வாய் கிழமை 9.02ல் இருந்து 9.31 மணிக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 2, நிலவை சுற்றி வருவதால் இஸ்ரோவின் சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தற்போது சந்திரயான் 2 ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாக  செயல்பட்டு வருவதாக கூறிய அவர், செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வை எட்ட உள்ளதாக கூறினார்.விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர்  2  ம் தேதி பிரியும் என்றும் அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் அதிகாலை 1.55 மணிக்கு தரையிறங்கும் என கூறிய சிவன், அன்றைய  தினம் நினைத்த இலக்கை அடைவோம் என்றும் இதனால் இந்தியாவின் விண்வெளி சாதனை நிச்சயம் உலக அளவில் பேசப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் விக்ரம் லேண்டர்

நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 2 இந்திய விண்வெளி வரலாற்றில் தனித்துவம் பெரும் வகையில் பேசப்படும்.

1912 views

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்...

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

206 views

"உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்" - மயில்சாமி அண்ணாதுரை

உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

159 views

பிற செய்திகள்

உரிய விசா இன்றி மலேசியா சென்ற பாக்கியராஜ் கைது - இந்திய தூதரக உதவியுடன் விடுதலை

புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த பாக்கியராஜ் உரிய விசா இன்றி மலேசியா சென்றதால் அங்கு கைது செய்யப்பட்டார்.

3 views

5 பவுன் நகை மற்றும் செல்போனை தவற விட்ட பெண் - சிடிவி உதவியுடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்

புதுச்சேரி அருகே பெண் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

21 views

சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி

சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.

396 views

இந்தியாவை இந்தி ஒருங்கிணைக்காது - புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்

இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது ஆனால் பிஎஸ்என்எல் தான் ஒருங்கிணைக்கும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

12 views

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

7 views

பலகட்சி ஜனநாயக முறை தோல்வியா? என மக்களுக்கு சந்தேகம் - அமித்ஷா

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பலகட்சி ஜனநாயக முறையில் மக்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.