தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராட்டம்
பதிவு : ஆகஸ்ட் 14, 2019, 05:23 PM
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், வரைவு தேசிய கொள்கை 2019-ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சேலம் :

அதேபோல சேலம் மாவட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுஷ் மருத்துவர்கள்,  6 மாத பயிற்சிக்கு பின் மாற்று மருத்துவத்தையும் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவை ரத்துசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சை :

தஞ்சையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,  அரசு தலைமை மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,  மருத்துவ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பிற செய்திகள்

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

3 views

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

5 views

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

50 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

275 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.