அதிகமான நீர்வரத்தால் பலத்த சேதத்தை சந்தித்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் - அடிப்படை வசதிகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை
பதிவு : ஆகஸ்ட் 14, 2019, 04:50 PM
அதிகமான நீர்வரத்தால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3 லட்சம் கனஅடிவரை அதிகபட்சமாக காவிரியில் நீர்வரத்து  இருந்தது. இதனால் ஒகேனக்கல்லில்  உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளும், பரிசல் துறை மற்றும்  நடைபாதையும் முற்றிலும் நீரில் மூழ்கியது. நேற்று  காலை முதல் படிப்படியாக காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை வெளியே தெரிகிறது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் பொருட்களால் நடைபாதையின் இருபுறமும் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டு இருந்து ஸ்டீல் வேலிகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.  பெண்களுக்கான குளியல் அறைகளின் பாதுகாப்பு சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. இதுதவிர மின்கம்பங்கள், ஒலிபெருக்கி கம்பங்கள். கண்காணிப்பு கேமராக்கள், நடைபாதைகள்  என பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து  அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  நீர்வரத்து குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்குவது கேள்விக் குறியாகியுள்ளது. ஒகேனக்கல்லில் சேதமடைந்த  பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் வர உள்ளது" - சேலம் மாவட்ட ஆட்சியர்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிக அளவில் இருக்கும் என்பதால், பொதுமக்கள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

705 views

மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுமா? - காவிரி டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

63 views

மேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

230 views

தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு

கேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

1117 views

மேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது? - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில்

அணையின் நீர் வரத்தை பொருத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

216 views

பிற செய்திகள்

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

2 views

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

17 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

221 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

6 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

160 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.