ராகுல் காந்திக்கு நான் விடுத்த அழைப்பை வாபஸ் பெறுகிறேன் - ஆளுநர் சத்யபால்
பதிவு : ஆகஸ்ட் 14, 2019, 03:55 PM
எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத்தயாராக இருப்பதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
காஷ்மீரில் அசாதாரண சம்பவங்கள் நிகழ்வதாக, ராகுல் காந்தி அண்மையில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ராகுல் காந்திக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயாராக உள்ளதாகவும், காஷ்மீர் வந்து, உண்மை நிலையை, அறிந்த பிறகு, கருத்து தெரிவிக்கலாம் என கூறினார்.இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, அழைப்பை ஏற்று காஷ்மீர்  வரத் தயாராக உள்ளதாகவும், விமானம் தேவையில்லை என்றும், மக்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் சந்திக்க சுதந்திரம் கொடுத்தால் போதும் என்றார்.இதற்கு பதிலளித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ராகுல் காந்தி  காஷ்மீர்  வருவதற்கு நிபந்தனை விதிப்பதால், அழைப்பை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தார்.இதனிடையே, சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருப்பதாக கூறி எப்போது வரட்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.