நெல்லையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதி - வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது
பதிவு : ஆகஸ்ட் 14, 2019, 02:23 PM
நெல்லையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதி சண்முகவேல் - செந்தாமரைக்கு தமிழக அரசு விருது வழங்க உள்ளது.
நெல்லை மாவட்டத்தில், தமது வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களை சண்முகவேல், செந்தாமரை தம்பதியினர் சாதுர்யமாக அடித்து விரட்டினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த தம்பதிக்கு தமிழக அரசு விருது வழங்க உள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், வீரதீரத்திற்கான விருதை முதலமைச்சர் வழங்குகிறார். தம்பதியை அம்பாசமுத்திரம் தாசில்தார் வெங்கடேஷ், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வருகிறார். இதற்கு பின் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளை அவர்கள் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச கருத்தரங்கில் தமிழக சிறுமி சாதனை - பள்ளி சார்பில் சிறுமிக்கு பாராட்டு விழா

சர்வதேச விண்வெளி கருத்தரங்கில் விருது பெற்று சாதனை படைத்த நெல்லை சிறுமிக்கு, பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது

137 views

மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

282 views

கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

415 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

36 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

190 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

46 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

27 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

746 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.