கோவாவை தொடர்ந்து சிக்கிம் எதிர்க்கட்சி காலி : கூண்டோடு பா.ஜ.க.வில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஐக்கியம்
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 03:49 PM
கோவாவை தொடர்ந்து சிக்கி​ம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமை சேர்ந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சார்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாரதிய ஜனதாவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்  செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொறுப்பாளர் ராம்மாதவ் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். இந்த இணைப்பின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி மற்றும் எட்டாவது மாநிலமான சிக்கிமிலும் பா.ஜ.க. கால் பதித்துள்ளது. அன்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் சிக்கிம் பிரதிகாரி கட்சி 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியை சார்ந்த பி எஸ் கோலாய் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.பா.ஜ.க. மொத்தம் உள்ள 32 இடங்களிலும் போட்டியிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து பா.ஜ.க.வில்  இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது சிக்கிமின் மிக முக்கிய கட்சியாக இருக்கும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க. வில் ஐக்கியமாகி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம்,  மணிப்பூர் திரிபுரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நாகலாந்து, மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி கட்சி ஆட்சி நடந்து  வருகிறது. 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளது மூலம் சிக்கிமில் தாமரை மலர்ந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2237 views

பிற செய்திகள்

2 தினங்களில் ரூ.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி

இரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

33 views

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19 views

எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்

நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

290 views

வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

14 views

சுதந்திர தின விழா கொண்டாட்டம் - நடனமாடி அசத்திய லடாக் எம்.பி ஜம்யங் ட்செரிங்

சுதந்திர தின விழாவில் பாஜக எம்.பி. ஜம்யங் ட்செரிங் நம்கியால் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.

80 views

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் விழா - வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.