தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள்
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 04:24 PM
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் : 

திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டனம் கடற்கரையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு கூட்டுத் தொழுகை நடத்தி, வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.  

ஸ்ரீவைகுண்டம் : 

இதேபோல், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரில் உள்ள பள்ளி வாசல் மைதானத்தில் பக்ரீத் பண்டிகை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் குர்ரானின் போதைனைகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். 

கரூர் :

கரூரில் பக்ரீத் பெருநாளை ஒட்டி, 54 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிலையில் பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் மட்டும், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். 

சேலம் :

சேலத்தில் உள்ள அரபிக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கர்நாடகா, கேரளா, நீலகிரி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் மீள சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2157 views

பிற செய்திகள்

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

2 views

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

17 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

229 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

6 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

163 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.