வாட்டி வதைக்கும் வறுமை : தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய இளைஞர்...
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 04:18 PM
இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாததால், தாயின் உடலை மகனே குப்பைத் தொட்டியில் வீசிய துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தனசேகரன் நகரில் வழக்கம் போல் குப்பைகளை எடுக்கச் சென்ற நகராட்சி ஊழியர்கள், குப்பைத் தொட்டியில் பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலையா, தற்கொலையா, வேறு ஏதேனும் காரணமா என நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் வசந்தி என்பதும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது மகன் முத்துலெட்சுமணனிடம் நடத்திய விசாரணையில், இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாததால், குப்பைத் தொட்டியில் தாயின் உடலை வீசியதாக கூறியது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வறுமையின் கோரப்பிடி, தாயின் உடலை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு வதைத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2130 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

36 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

190 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

46 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

27 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

744 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.