செப்டம்பர் 5 முதல் ஃபைபர் கேபிளில் இணைய சேவை - மும்பையில் முகேஷ் அம்பானி அறிவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 03:33 PM
புதிய அதிவேக இணைய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதன் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஃபைபர் கேபிள் வழியான, அதிவேக இணைய சேவையை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்வதாக தெரிவித்தார். மாதந்தோறும் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் இந்த சேவை கிடைக்கும் எனவும் ஒரே ஃபைபர் கேபிள் சேவையில் அதிவேக இணையசேவை, டி.வி. சேனல்கள், புதிய திரைப்படங்களை பார்க்கும் வசதி கிடைக்கும் எனவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டி பிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது என தெரிவித்த முகேஷ் அம்பானி, ஜியோ பைபர் தொடக்க சலுகையாக டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம் எனவும் கூறினார். ஜியோ பைபரில் இணைய சேவை வேகம் நொடிக்கு 1 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு மாதத்தில் பத்து கோடி இந்தியர்கள் ஜியோ மூலமாக வீடியோ கால் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஜியோ ஃபைபர் மூலம் மிக குறைந்த செலவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முன்னேற முடியும் என்றும் ஆயிரத்து 600 நகரங்களில் 2 கோடி இல்லங்களிலும் ஒன்றரை கோடி தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர், இந்த ஆண்டு சென்றடையும் எனவும் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அதற்கான சிறப்பு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறிய அவர், ஜியோ பைபர் மூலம் திரையரங்குகளில் படம் வெளியாகும் அதே நேரம் வீட்டில் இருந்தே அந்த படத்தை பார்க்க முடியும் என்றும், 2020 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார். ஜியோ செல்போன் சேவை சந்தாதாரர் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் ஒவ்வொரு மாதமும் ஜியோவில் 10 லட்சம் பேர் இணைந்து வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2130 views

பிற செய்திகள்

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2234 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

592 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

100 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

197 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

23 views

காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.