இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் : 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 07:17 AM
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 79 ரன்களும் எடுத்தனர். 280 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், மழை காரணமாக போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ரன்களாக மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

விராட் கோலி சாதனை

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், தனது 42-வது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். கங்குலி 297 இன்னிங்ஸ்களில் விளையாடி 11 ஆயிரத்து 221 ரன்கள் எடுத்த நிலையில், அதனை 229 இன்னிங்ஸ்களிலேயே கோலி கடந்தார்.  

சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கும் அவர் முன்னேறினார். இந்நி​லையில் தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு, சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்கள் குவித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சாதனையையும் கோலி முறியடித்தார். அந்த அணிக்கு எதிராக மியாண்டட் ஆயிரத்து 930 ரன்கள் குவித்து முன்னிலையில் இருந்த நிலையில், அந்த சாதனையையும் கோலி கடந்தார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

38 views

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி , PORT OF SPAINல் உள்ள QUEENS PARK OVAL மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

51 views

பிற செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

536 views

பெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு?

டிஎன்பிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பந்து வீச்சாளர் பெரியசாமி.

121 views

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

58 views

முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார்.

826 views

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

296 views

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.