காஷ்மீர் பெண்களை ஹரியானாவுக்கு கொண்டு வருவோம் - ஹரியானா மாநில முதலமைச்சரின் பேச்சால் சர்ச்சை
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 07:13 PM
ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தில் மத்திய அரசின் பெண் குழந்தையை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டத்தின் வெற்றிக் கூட்டம் நடைபெற்றது.
ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தில் மத்திய அரசின் பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் வெற்றிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், இத்திட்டத்தின் மூலம் கடந்த 2011 கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 834 பெண்கள் என இருந்த பாலின விகிதாச்சாரம் தற்போது 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என உயர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். அத்துடன் பிற்காலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பீகாரில் இருந்து பெண்களை மருமகள்களாக கொண்டு வரலாம் என அமைச்சர் ஒருவர் கூறியதாக தெரிவித்தார். தற்போது 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு காஷ்மீர் பெண்களையும் இங்கே கொண்டு வருவதற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதாக பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது. சமூக வலை தளங்களில் முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன - எஸ்.பி.மாலிக் கருத்து

காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.

52 views

பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்

பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

63 views

காஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.

53 views

பிற செய்திகள்

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம் : 13 முதல் 14 பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு?

கர்நாடகா மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

5 views

வருமான வரி திருத்த சட்டம் - அறிக்கை சமர்பித்தது நிபுணர் குழு

வருமானவரி சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் தாக்கல் செய்தது,

12 views

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.

15 views

உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.

22 views

"பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி வேண்டும்" : மேற்குவங்கத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர கோரி, மேற்குவங்கத்தில், லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ​தொடங்கியுள்ளனர்.

228 views

எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.