ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கிடக்கும் கழிவுகளை அகற்ற கோரிக்கை
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 06:21 PM
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கிடக்கும் கழிவுகளை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கிடக்கும் கழிவுகளை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பானைகளை உடைத்து காரியம் செய்வது, குளிக்கும்போது துணிகளை வீசுவது போன்றவை பக்தர்களின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அக்னி தீர்த்த கடல், திடீரென 100 அடி அளவுக்கு உள் வாங்கியது. இதனால், கடலுக்குள் இருந்த துணிக் கழிவுகள், சிதிலமடைந்த சிலைகள், உடைந்த ஓடுகள், பாறை படிமங்கள் ஆகியவை வெளியே தெரிந்தது. ரசிப்புடன் கடலில் குளிக்கும் பக்தர்கள், கழிவுகள் மிதந்த காட்சியை பார்த்து முகம் சுழித்தனர். அவற்றை விரைந்து அகற்றுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 views

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

3 views

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

5 views

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

50 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.