கேரளாவில் கனமழைக்கு இதுவரை 42 பேர் பலி - கேரள முதலமைச்சர் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 05:21 PM
கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் கனமழைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனமழையால் மீண்டும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கனமழைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வயநாடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் மாற்று இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மாநிலம் முழுவதும் 15 லட்சம் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சரி செய்யும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

55 views

பிற செய்திகள்

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

14 views

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

18 views

சந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி

சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

28 views

இந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்

இந்திய விமானப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.

84 views

சில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

15 views

ஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு

பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.