சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கூட்டம் - மன்ற சேவைகளை விரிவுபடுத்த முடிவு
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 04:35 PM
மாற்றம் : ஆகஸ்ட் 10, 2019, 05:28 PM
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
நற்பணி மன்ற தலைவர் சபேஷ் ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது, குளம் குட்டைகளை சுத்தம் செய்வது போன்ற தன்னார்வ சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் புரவலர் பொறுப்பை ஏற்றுகொண்டுள்ள ஆதவன் ஆதித்தனுக்கு வரவேற்பும் பாராட்டும் கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், தமிழக முன்னாள் சபாநாயகருமான சிபாஆதித்தனாரின் பிறந்த நாளை அரசு விழாவாக அங்கீகரித்துள்ள தமிழக முதலமைச்சருக்கும், அவரது பெயரில் விருது அறிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இந்த கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது. 

பிற செய்திகள்

நெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன?

நெல்லையில் கொள்ளை சம்பவ முயற்சியின் போது வீட்டில் இருந்த நாய்கள் குரைக்காதது ஏன் ? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக போலீசார் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

936 views

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 views

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

15 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

197 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

10 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.