காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 04:01 PM
கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதை அடுத்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலை மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது. இதையடுத்து, இந்த இரு அணைகளில் இருந்தும் கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அணைக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. படிப்படியாக உயர்ந்து இன்று மாலைக்குள் ஒரு லட்சம் கனஅடியை தாண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேகமாக உயரும் அமராவதி அணை நீர்மட்டம் :



உடுமலை அருகிலுள்ள அமராவதி அணையின் நீர் மட்டம், மூன்று தினங்களில் 25 அடி வரை உயர்ந்து, 70 புள்ளி மூன்று ஒன்று அடியாக அதிகரித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் இன்னும் ஒரே ஒரு நாளில் அணை அதன் முழுக் கொள்ளளவான 90 அடியை எட்ட வாய்ப்புள்ளது. அமராவதி அணைக்கு, வினாடிக்கு 5 ஆயிரத்து 99 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பினால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான நிலங்கள் பாசனவசதி பெறும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை



கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்ட நொய்யல் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பாளையம் கல்லூரி சாலைகளை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம்  நீரில் மூழ்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது . தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

52 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

33 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

184 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

42 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

27 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

709 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.