ராகுல் காந்தியே தலைவராக தொடர வேண்டும் - காங்கிரஸ் நிர்வாகிகள்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 03:56 PM
ராகுல்காந்தியே தலைவராக தொடரவேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ்  தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த நடந்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  முன்னதாக, இந்த கூட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருப்பதாகவும்,  ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த தாமும், ராகுல் காந்தியும் அந்த கூட்டத்தில் இருக்க தேவையில்லை என்பதால் வெளியே வந்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து, இருவரும் இல்லம் திரும்பினர். இந்நிலையில் ராகுல்காந்தியே தலைவராக தொடரவேண்டும் என, காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

பிற செய்திகள்

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

11 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

182 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

149 views

தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.