"இளைஞனை போல் நேரத்தை செலவிட்டார் மோடி" - தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் புகழாரம்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 01:19 PM
பிரதமர் மோடி சுற்றுசூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.
மனிதன் தனித்து விடப்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக தொலைக்காட்சிகளில் சாகச நிகழ்ச்சி நடத்தி வரும் பியர் கிரில்ஸ், பிரதமர் மோடியுடன் பங்கேற்ற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. உத்தர்காண்ட் மாநிலம் ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் மோடி பங்கேற்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமருடன் தனது பயண அனுபவங்கள் குறித்து பியர் கிரில்ஸ் விவரித்துள்ளார். அதில்,  சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை அலாஸ்காவுக்கு அழைத்து சென்றது போன்ற வாய்ப்பு இது என தெரிவித்துள்ளார். இருவரும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் பயணத்தின் போது இளைஞனை போல் மோடி நேரத்தை செலவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் அமைதி தன்னை ஆச்சரியப்பட வைத்ததாகவும் கிரில்ஸ் கூறினார். மோடியை சாகச பயணத்திற்கு அழைத்து சென்றது தனது பாக்கியம் என்றும் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தை தம்மால் என்றுமே மறக்க முடியாது என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2130 views

பிற செய்திகள்

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

2501 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

650 views

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

106 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

214 views

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு : தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்தன

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோயில் இருந்ததற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

25 views

காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.