திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரமணியசாமி தரிசனம்
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 05:47 PM
திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயில்களை மாநில அரசுகளிடம் இருந்து மீட்க தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயில்களை மாநில அரசுகளிடம் இருந்து மீட்க தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அவர் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கிய  அர்ச்சகர்கள், சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன்சாமி, மாநில அரசுகளின் பிடியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயிலை, மீட்க தாக்கல் செய்த பொது நல வழக்குகள் சென்னை மற்றும் அமராவதி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக கூறினார்.

பிற செய்திகள்

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

8 views

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

15 views

சந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி

சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

24 views

இந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்

இந்திய விமானப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.

79 views

சில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

14 views

ஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு

பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.