ஸ்ரீநகரில் திரும்பியது, இயல்பு வாழ்க்கை - உதம்பூரில் பள்ளிகள் திறப்பு
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 05:24 PM
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலைமை மாறி இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலைமை மாறி, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஸ்ரீநகரில் உள்ள சாலைகளில் இன்று மக்கள் நடமாட்டம் திரும்பி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.இதுபோல, உதம்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 144 தடை உத்தரவு நீடித்தபோதிலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் வர்த்தக சந்தைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உதம்பூர் காவல் துணை ஆணையர் பியூஸ் சிங்லா தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.