எகிறும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி...
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 03:31 PM
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அன்றாட பயன்பாட்டிற்கும் முதலீடு செய்யவும் தங்கம் ஒரு அத்தியாவசிய பொருளாகவே மாறியிருக்கிறது. இதன் காரணமாக தங்கத்தை வாங்க பொதுமக்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 1ஆம்  தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் 3 ஆயிரத்து 78 ரூபாயாக இருந்தது. அப்போது ஒரு சவரன் தங்கம் 24 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூன் 25ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 3 ஆயிரத்து 308 ஆக இருந்தது. அப்போது ஒரு சவரன் தங்கமானது 26 ஆயிரத்து 464 ரூபாயை தொட்டது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு படிப்படியாக குறைந்தது. மாதத்தின் துவக்கத்தில் கிராம் 3212க்கு விற்பனையாகி ஒரு சவரன் 25, 696 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து வந்த முகூர்த்த நாட்கள் காரணமாக தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால் தங்கத்தின் தேவையும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மாதத்தின் இறுதி நாளான 31ஆம் தேதி ஒரு கிராம் 3 ஆயிரத்து 338 ஆக உயர்ந்து ஒரு சவரன் 26 ஆயிரத்து 704 ரூபாயை தொட்டது. ஆனால் கடந்த 3 ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 416க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு சவரன் 27 ஆயிரத்து 328 ஆக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 3547 ஆக உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 376 ஐ தொட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 3571 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு 28 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயரும் என வியாபாரிகள் கூறியுள்ள நிலையில் விரைவில் 30 ஆயிரம் ரூபாயை தொடும் என்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

தங்கத்தின் விலை இன்று திடீர் சரிவு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.

7498 views

பிற செய்திகள்

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

0 views

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 views

குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

6 views

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

20 views

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

255 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.