காவிரியில் புதிதாக மேகதாது அணை கட்டும் விவகாரம் : தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
பதிவு : ஆகஸ்ட் 07, 2019, 05:05 PM
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்​பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.
காவிரியில், மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் அளித்த ஆய்வறிக்கைகளை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய  மதிப்​பீட்டுக்குழு விரிவாக ஆய்வு செய்தது. இதுதொடர்பாக இருமாநில அரசுகளிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, தற்போது உள்ள திட்டப்படி, நிதி வழங்குவதில் உள்ள விதிமுறைகளை திருத்த அனுமதிக்க முடியாது என அந்த குழு, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது உள்ள திட்டப்படி செயல்படுத்துவதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அதுகுறித்து இருமாநில அரசுகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இருமாநிலங்களும் இணக்கமான முடிவை எட்டிய பின்னர் டேம் ஆப் ரெபரன்ஸ் எனப்படும் விதி திருத்தம் குறித்து முடிவு செய்யலாம் என, மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் நிபுணர்களைக் கொண்ட மதிப்பீட்டு குழு பரிந்துரைத்துள்ளது. அணைக்கட்டுவதற்கான மாற்று இடம் மற்றும் அணையின் உயரம் குறித்து விரிவாக விவாதித்து உரிய முடிவுக்கு எடுக்க வேண்டும் என்றும், அணைக்கட்ட தேவையான வனநிலம் மற்றும் வனவிலங்கு சரணாலய பகுதிகள் 4 ஆயிரத்து 996 ஏக்கர் தேவைப்படுவதை குறைத்து, தேவையான நிலம் மட்டும் எடுக்கும் வகையில் மாற்று திட்டம், 2013 ஆண்டு சட்டப்படி, கையகப்படுத்தும் நிலத்துக்கு வெளிப்படையான, நியாயமான இழப்பீடு வழங்குவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து நிபுணர் குழு விளக்கம் கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2130 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9835 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5163 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

32 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

181 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

41 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

24 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

696 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.