பொருளாதார வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி குறைத்தது : 7 % வளர்ச்சி எதிர்பார்ப்பு 6.9 சதவீதமாக மாற்றியமைப்பு
பதிவு : ஆகஸ்ட் 07, 2019, 03:26 PM
நடப்பு நிதியாண்டுக்கான, இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 9 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் மூன்றாவது நிதிக்கொள்கை கூட்டம் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்தியாவுக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பினை 6 புள்ளி 9 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவமழை குறைவு, பேரியல் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வளர்ச்சி கணிப்பு மாற்றியமைக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் கூறினார். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தினை 5 புள்ளி 75 சதவீதத்தில் இருந்து  35 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5 புள்ளி 40 சதவீதமாக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த ரெப்போ வட்டி விகிதமாக  உள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக, உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மந்த நிலையை சந்தித்து வருகின்றன என்றும் சக்திகாந்ததாஸ் கூறினார். நெப்ஃட் பரிவர்த்தனைகளுக்கான நேர கட்டுப்பாடு நீக்கப்பட்டு, அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் நெப்ஃட் பணப் பரிமாற்ற சேவைகள் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம், வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2157 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9929 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5173 views

பிற செய்திகள்

மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி : மின்கம்பியில் சாய்ந்த கொடி கம்பத்தை தொட்டபோது விபத்து

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில், கொடியை இறக்கும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7 views

கர்நாடகாவில் நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம்? - முதலில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

26 views

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன.

26 views

"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

37 views

ஆவணி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார்.

10 views

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.