"சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிருச்சே" - ரஜினி ரசிகர்களை விடாமல் துரத்தும் கோமாளி
பதிவு : ஆகஸ்ட் 06, 2019, 06:33 PM
ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் டிரைலரை தொடர்ந்து, அந்த படத்தின் பாடல் வரிகளும் நடிகர் ரஜினிகாந்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, யோகி பாபு,காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் கோமாளி. கோமாவிலிருந்து குணமடைந்த நாயகன் தொடர்பான கதையை கொண்ட கோமாளி படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக அமைந்திருந்தது. இதற்கு கமல்ஹாசன் தொடங்கி, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரஜினி ரசிகர்களும் கோமாளி படத்தை புறக்கணிப்போம் என சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வந்தனர். ரஜினி ரசிகர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, படத்தில் இந்த காட்சியை மாற்றுவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்தார்.  இந்த நிலையில், கோமாளி படத்தின் பாடல் ஒன்றில், ரஜினியின் வயதை விமர்சிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி  ஆயிருச்சே, இப்போ பேத்தியெல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே என்ற பாடல் வரிகள் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது ரஜினியின் வயதை கேலி செய்யும் விதமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரைலரின் சர்ச்சை அடங்குவதற்குள் பாடல் வரிகள் அடுத்த பிரச்சினைக்கு அச்சாரம் போட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2240 views

பிற செய்திகள்

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

696 views

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

99 views

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

28 views

விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத் தமிழன்' டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத் தமிழன்.

175 views

பாரதிராஜாவிடம் பொன்னாடையை பறித்த சிவக்குமார்...

தமக்கு பொன்னாடை போர்த்த வந்ததை தடுத்த நடிகர் சிவக்குமார், அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து உரிமையுடன் பறித்தது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.

33411 views

"மகா மாநாடு" புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.