ரத்து செய்யப்பட்ட காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 : 370வது சட்டப்பிரிவை உருவாக்கிய தமிழர்...
பதிவு : ஆகஸ்ட் 06, 2019, 02:45 PM
ஜம்மு காஷ்மீருக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ உருவாக்கியதில் தமிழர் ஒருவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவான 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டப்பிரிவை உருவாக்கியவர், தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, காஷ்மீர் ஆட்சி பொறுப்பில் ஷேக் அப்துல்லா இருந்தார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையை நேரு அதற்காக இந்த சிறப்பு சட்டத்தை உருவாக்க அம்பேத்கரிடம் பிரதமர் நேரு கேட்டுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், அந்த பணி கோபாலசாமி அய்யங்காருக்கு ஒதுக்கப்பட்டது. தஞ்சையை சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார், துறை ஒதுக்கப்படாத மத்திய அமைச்சராக இருந்த இவர் காஷ்மீர் விவகாரங்களை கையாண்டு வந்தார். கோபாலசாமி அய்யங்கார் உருவாக்கிய இந்த 370வது சட்டப்பிரிவு, அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தால் அனுமதி அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2269 views

பிற செய்திகள்

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

10 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

842 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

9 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

87 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.