சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...
பதிவு : ஜூலை 23, 2019, 03:23 PM
மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரை  சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரின் மனைவியை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு 2 மகள்கள் சென்று விட்டனர். 
மிகவும் கஷ்டப்பட்ட வயதான அழகர்சாமி தம்பதியர் சொத்துக்களை மகள்கள் பறித்து கொண்டு தங்களை அனாதையாக விட்டு விட்டு சென்றதாக தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருமங்கலம்  கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டார். அழகர்சாமி , மனைவி சகுந்தலா மற்றும் அவர்களது இரு மகள்கள், உதவியாக உள்ள கணேசன் ஆகியோரை  நேரில் வரவழைத்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். பெற்றோரை கவனிக்காமல்விட்ட 2 மகள்கள் அபகரித்து கொண்ட 70 லட்சம் மதிப்புள்ள  வீட்டின் பத்திர பதிவை ரத்து செய்த கோட்டாட்சியர் 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டு அழகர்சாமியிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால் அழகர்சாமி மற்றும் அவரது மனைவி சகுந்தலா மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்

ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

61 views

பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு : ஈரோடு மாவட்ட நிர்வாகம் முயற்சி

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

34 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

170 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

21 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

56 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

35 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

25 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.