இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து
பதிவு : ஜூலை 21, 2019, 06:45 PM
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும், ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்தும் போலீசார் வர தாம‌தம் ஆனதால், அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த இளைஞர்கள் ரமேஷ் ,  சந்தோஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரைமணி நேரம் கழித்து போலீசார் வந்த‌தால், அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றான மெரினா கடற்கரை சாலையில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடாத‌து ஏன் என கேள்வி எழுப்பிய சக பயணிகள், போலீசாரின் அலட்சியம் காரணம்  என குற்றம்சாட்டினர். 

நின்ற லாரி மீது மோதிய பேருந்துகள் - அடுத்தடுத்து நடந்த கோர விபத்துநின்று கொண்டிருந்த லாரி மீது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 2 பேர்  உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரும்புக் கம்பி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனை அறியாத சென்னையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று , நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. அதனை தொடர்ந்து வந்த தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பின்பகுதியில் மோதி நின்றது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரியின் கிளீனர் உயிரிழந்தனர். அதிகாலை நேரம் என்பதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியாமல் மீட்பு படையினர் திணறினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

252 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2390 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1357 views

பிற செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

14 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

61 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

1331 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

50 views

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

10 views

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை...

பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.