அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பதிவு : ஜூலை 21, 2019, 06:10 PM
உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு, நீர் வரத்து அதிகரித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அமராவதி அணையின், நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு 460 கன அடியில் இருந்து 860 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில்,  36 அடியாக இருந்த நீர் மட்டம், ஒரே நாளில் 38 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணை - நீர்வரத்து 174 கனஅடி :குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணையிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்ட 800  கன அடி  தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த 14 ம் தேதி முதல் விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.தற்போது வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 205 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 174 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தாராபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

25 views

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

119 views

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு...

இதன் மூலம் 12 ஆயிரத்து 18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

52 views

83 அடியை எட்டியது அமராவதி அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கஜா புயல் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

246 views

பிற செய்திகள்

ஆவின் பாலகத்தில் மது விற்பனை?

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் செக்போஸ்ட் அருகே ஆவின் பாலகத்தில் மது விற்பனை செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

3 views

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு எழுதிய ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

20 views

பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும், புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

267 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு

ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர்

77 views

செப் 7-ல் நிலவில் இறங்குகிறது சந்திரயான் 2 - தொடர் சாதனையை தக்க வைக்குமா இஸ்ரோ?

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது.

6 views

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.