பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
பதிவு : ஜூலை 20, 2019, 08:24 PM
தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அன்சருல்லா' என்ற பயங்கரவாத அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அந்த16 பேரின் வீடுகளிலும் அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள தௌபிக் முகமது வீட்டில்  3 பேர் கொண்ட என்.ஐ. ஏ. அதிகாரிகள் குழு, காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள முகமது இப்ராஹிம் வீட்டிலும், 10 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். மதுரை நரிமேட்டில் உள்ள முகமது ஷேக் மொய்தீன் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல, தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் மீரான் கனி, முகமது அப்சல் சகோதரர்களின் தாய் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள குலாம்நபி ஆசாத் வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த  ரபி அகமது, பைசல் ஷெரீப், முந்தாசீர், முகைதீன் சீனி, சாகுல் அகமது ஆகியோரது வீடுகளிலும்,  வாலிநோக்கம் பகுதியில் உள்ள பாரூக் இல்லத்திலும் என்ஐஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்..நாகை மாவட்டம் தரங்கம்பாடி மடப்புரம் பகுதியை சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவருக்கு சொந்தமான வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 15 ஆண்டுகளாக இவரது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சிக்கிய ஆவணங்கள் மூலம் அடுத்த கட்ட விசாரணையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தென்னிந்திய அனைத்து ஊடக 2-வது உச்சி மாநாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய அனைத்து காட்சி, அச்சு, டிஜிட்டல் போன்ற அனைத்து பரிணாம ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாடு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது.

18 views

நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

71 views

வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை : அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் விசாரணை

சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ குழு சோதனை மேற்கொண்டு வருகிறது

76 views

மு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.

217 views

பிற செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

28 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

12 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

427 views

வாணியம்பாடியில் 3 - வது நாளாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து, எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

27 views

விஷப்பாம்புகளுடன் மனு அளிக்க வந்த மக்கள் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் பார்த்திபனூர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

60 views

ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.