அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்
பதிவு : ஜூலை 20, 2019, 08:10 PM
சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அணை பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை அதிமுக எதிர்த்து வருவதாக கூறிய அவர், இதை திரும்ப பெற தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் கூறினார்அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியதோடு சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சட்டமன்ற நடவடிக்கை நேரலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், சட்டமன்ற நடவடிக்கையில் சரி பாதி காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.இதேபோல் கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில்விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, புயலில் போது சுமார் 32 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்ததாகவும், இதில் ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மட்டுமே அகற்றப்படாமல் உள்ளதாகவும் அவை​ ஒரு மாதத்தில் அகற்றப்படும் என்றும் கூறினார்.தொடர்ந்து தனியார் மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.இதேபோல் சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களை 6 லிருந்து 9 ஆக உயர்த்த அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதாவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்படும் என்றார். 110 விதியின் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 3 வது முறையாக ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்து அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்

திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

302 views

கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

243 views

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

56 views

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி

129 views

பிற செய்திகள்

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

16 views

"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

27 views

முக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா?

இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.

6 views

குறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்

தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

7 views

சுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.

12 views

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.