சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...
பதிவு : ஜூலை 19, 2019, 07:24 PM
காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த தம்பதி அருள்ராஜ், ந‌ந்தினி. மருத்துவர்களான  இவர்களின் 3 வயது குழந்தை அன்விகாவை கவனித்து கொள்வதற்காக இணையதளம் மூலமாக பணிப்பெண்ணை தேடியுள்ளனர். இதன் மூலம், சென்னை பாடிகுப்பத்தை சேர்ந்த அம்பிகா என்ற பெண் அறிமுகம் ஆகிறார். ஒருமாதம் வேலை செய்து வந்த  அம்பிகா, மற்றும் 3 வயது குழந்தை அன்விகா திடீரென மர்ம நபர் ஒருவரால் கடத்தப்படுகின்றனர். கடத்திய மர்ம நபர் அருள்ராஜ்  - ந‌ந்தினி தம்பதியிடம் 60 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த மருத்துவ தம்பதி அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அமைந்தகரை காவல்நிலையத்தில் இருந்தபடியே பணிகளை தீவிரப்படுத்தினார். இதனால் விசாரணை சூடுபிடித்த‌து. மீண்டும்  4 மணிக்கு அருள்ராஜ் -  ந‌ந்தினி தம்பதிக்கு  போன் செய்த அந்த மர்ம நபர் பணத்தை தரவில்லை என்றால், குழந்தையையும் பணிப்பெண் அம்பிகாவையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த அழைப்பு வந்த செல்போனின் சிக்னல் ரெட்ஹில்ஸ் அருகே பதிவானது... இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், தப்பி ஓட முயன்ற மர்ம நபரை விரட்டி பிடித்தனர். இதையடுத்து, நீலாங்கரையில் இருந்த அம்பிகாவும், மருத்துவ தம்பதியின் 3 வயது குழந்தையும் மீட்கப்பட்டனர். கடத்தல்நபரை கைது செய்து குழந்தையை மீட்ட பிறகே மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் அமைந்தகரை காவல்நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றார். போலீசாரிடம் சிக்கிய மர்ம நபரிடம் விசாரித்த‌தில், அம்பிகாவும் இந்த கடத்தலுக்கு உடந்தை, கடத்தியவர் அம்பிகாவின் காதலன் என திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அம்பிகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் தான் இந்த கடத்தலை அரங்கேற்றிய கலிமுல்லா. இருவரும் காதலித்து வந்த நிலையில்,  சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். குழந்தையை வீட்டிற்குள் கொண்டு செல்வது போல பாசாங்கு செய்த அம்பிகா, கலிமுல்லாவுடன் சேர்ந்து குழந்தையை கடத்திவிட்டு, தானும் கடத்தப்பட்டது போல, சினிமா பாணியில் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். சென்னை போலீசாரின் துரித நடவடிக்கையால் இவர்களின் பலே நாடகம் முறியடிக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10296 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5251 views

பிற செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

14 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

61 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

1412 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

50 views

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

10 views

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை...

பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.