சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார்...
பதிவு : ஜூலை 18, 2019, 02:16 PM
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று உயிரிழந்தார்.
சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபாலை, நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 9ஆம் தேதி ஆம்புலன்சில் வந்து சரணடைந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி அவரது மகன் அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, இன்று உயிரிழந்தார். அவரது உடல் மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனைக்கு பிறகு, சொந்த ஊருக்கு கொண்டு  செல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராஜகோபால் உடல் நாளை அடக்கம்

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

901 views

பிற செய்திகள்

ஆவின் பாலகத்தில் மது விற்பனை?

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் செக்போஸ்ட் அருகே ஆவின் பாலகத்தில் மது விற்பனை செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

3 views

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு எழுதிய ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

20 views

பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும், புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

248 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு

ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர்

74 views

செப் 7-ல் நிலவில் இறங்குகிறது சந்திரயான் 2 - தொடர் சாதனையை தக்க வைக்குமா இஸ்ரோ?

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது.

6 views

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.