பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் குறித்த கூடுதல் தகவல்கள்
பதிவு : ஜூலை 17, 2019, 05:46 PM
கடந்த 1970 ஆம் ஆண்டு மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பிறந்த குல் பூஷன் ஜாதவ் இந்திய கடற்படையில் பொறியியல் துறை அதிகாரியாக பணியாற்றியவர்.
கடந்த 1970 ஆம் ஆண்டு மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பிறந்த குல் பூஷன் ஜாதவ் இந்திய கடற்படையில் பொறியியல் துறை அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் உளவாளி என, பாகிஸ்தான் ராணுவத்தினரால் இவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர பலுசிஸ்தான் கோரி, போராடும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி மற்றும் ஆயுதப் பயிற்சி அளித்தார் என குற்றம் சாட்டிய பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், இவருக்கு 2017 ஏப்ரலில் மரண தண்டனை விதித்தது. ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, குல்பூஷன் ஜாதவ் முன்னாள் கடற்படை அதிகாரி எனவும், விருப்ப ஓய்வு பெற்று, ஈரான் சென்று அங்கு தொழில் துவங்கி நடந்தி வந்தார் என கூறியது. மேலும், குல்பூஷன் ஜாதவ்வுக்கு, விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா,  சர்வதேச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சர்வதேச நீதிமன்றம், 2017 மே 18 அன்று, ஜாதவ்வுக்கு விதிக்கபட்ட மரண தண்டனைக்கு இடைகால தடை  விதித்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது. 

பிற செய்திகள்

கர்நாடக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் பதவி ஏற்பு : ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 views

மத்தியப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்கள் : நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்களை நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

6 views

செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் -2 பயணத்தில் முக்கிய மைல்கல் இன்று எட்டப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

24 views

கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

65 views

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

1253 views

சத்தீஸ்கரில் முத்தலாக் கூறி மனைவியை தாக்கிய கணவன் கைது

சத்தீஸ்கரில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.