நீட் மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின்...
பதிவு : ஜூலை 17, 2019, 01:23 PM
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து  இன்று கேள்வி எழுப்பினார். அப்போது நிராகரிக்கப்பட்ட 2 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என கேட்டார். 


இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசால் கடந்த 22.9.2017ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து தமிழக அரசு கடிதம் எழுதியும் இதுவரை பதில் கடிதம் கிடைக்கப்பெறவில்லை என்றார். மசோதாவில் என்ன குறை இருக்கிறது என தெரிந்தால் தான் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும் என கூறிய அமைச்சர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ரிஜக்ட் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்றும் அதற்கு பதிலாக வித் ஹெல்டு அண்ட் ரிட்டர்ன் என்ற வார்த்தையே இடம்பெற்றிருப்பதாக கூறினார். மசோதாக்களில் உள்ள  குறைகளை சுட்டிக்காட்டினால், அதை சரிசெய்து மீண்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பலாம் என்றும் கூறிய அமைச்சர், மத்திய அரசின் கடிதத்தை, அவையில் படித்துக்காட்டினார். இதுதொடர்பாக முதல்வர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவை எடுப்போம் இல்லாவிட்டால் சட்ட ரீதியாக வழக்கு தொடர்வோம் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். 2 ஆண்டுகளாக ஏன் அழுத்தம் தரவில்லை என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் மீண்டும் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதால் இனியாவது தேர்தல் நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். அதேபோல் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமியும் பேரவையில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 21 ஆண்டுகளுக்கு பிறகு வார்டு வரையறைகள் மேற்கொள்ளப்பட்டு அது தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு" - கனிமொழி

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

15 views

திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதா - மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

63 views

நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? - ஸ்டாலின்

நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,மறு தீர்மானம் கோரியதும் அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலையும் தற்போது பார்க்கலாம்...

48 views

பிற செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

28 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

12 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

426 views

வாணியம்பாடியில் 3 - வது நாளாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து, எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

27 views

விஷப்பாம்புகளுடன் மனு அளிக்க வந்த மக்கள் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் பார்த்திபனூர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

60 views

ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.