கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு
பதிவு : ஜூலை 16, 2019, 06:38 PM
கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், காலை முதல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பு, சபாநாயகர் தரப்பு, கர்நாடக முதல்வர் குமாரசாமி தரப்பினர் பரபரப்பாக வாதிட்டனர். உணவு இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட்ட வாதத்தில், கர்நாடகா எம் எல் ஏகள் விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாகவும் எனவே, இரண்டு தரப்புக்கு பாதகமில்லாத உத்தரவை தான் பிறப்பிப்போம் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். அப்போது, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.  இதனை தொடர்ந்து வாதிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி  தரப்பு வழக்கறிஞர் சபாநாயகர் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் தான் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணிக்கு, தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார். 

பிற செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்கள் : நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்களை நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

6 views

செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் -2 பயணத்தில் முக்கிய மைல்கல் இன்று எட்டப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

21 views

கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

64 views

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

1229 views

சத்தீஸ்கரில் முத்தலாக் கூறி மனைவியை தாக்கிய கணவன் கைது

சத்தீஸ்கரில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

47 views

நிலச்சரிவில் உயிரிழந்தவரின் உடலுக்கு இருதரப்பினர் உரிமை கோரல் : மரபணு சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை

கேரளாவில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலத்திற்கு இருதரப்பினர் உரிமை கோரியதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.