ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...
பதிவு : ஜூலை 16, 2019, 03:25 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.
குடியாத்தம் அருகே உள்ள  கொல்லகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக  5 ஆழ்துளை கிணறுகளை  அமைத்தனர். அனைத்திலும்  கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாததால் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொது மக்களுடன் இணைந்து மழை நீரை ஆழ்துளை கிணறுகளில் சேமிக்க முடிவு செய்தனர். அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராமத்தின் தெருக்களில் கால்வாய்கள் தோண்டினர். அவற்றின் மூலம் மழை நீரை சேமிக்கும் வகையில் 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்கு  பக்கத்தில் பெரிய பள்ளம் தோண்டி பிவிசி பைப்புகளை புதைத்தனர். அதன் மேல் சிறு சிறு குழாங்கற்களையும் கருங்கல்லையும்  கொட்டி சேற்றுடன் கலந்து வரும் மழை நீர் வடிகட்டி கிணற்றுக்குள் செல்லுமாறு அமைத்தனர். அண்மையில் பெய்த கனமழையால் கிணற்றில் தண்ணீர் சென்றது. இதை கண்டு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழைநீர் சேகரிப்பால்  அருகில் உள்ள  விவசாய  கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.  இதே போல் பிற கிராமங்களிலும் மழைநீர் சேகரிப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினால் குடிநீர் பிரச்சினை வராது என்று கொல்லகுப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

வேலூர் : குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - சுகாதார சீர்கேடு எழுவதாக புகார்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, வி.சி.மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலியிடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

37 views

குடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

62 views

மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்

வேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

270 views

"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

403 views

பிற செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

67 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

1739 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

56 views

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

10 views

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை...

பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.